fbpx
Homeபிற செய்திகள்துங்காவி ஊராட்சியில் 420 விவசாயிகள் குடும்பத்திற்கு மானிய திட்டங்கள் வழங்கல்- திருப்பூர் ஆட்சியர் எஸ்.வினீத் தகவல்

துங்காவி ஊராட்சியில் 420 விவசாயிகள் குடும்பத்திற்கு மானிய திட்டங்கள் வழங்கல்- திருப்பூர் ஆட்சியர் எஸ்.வினீத் தகவல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், துங்காவி ஊராட்சியில் மொத்தம் 420 விவசாயிகள் குடும்பத்திற்கு வேளாண்மை துறை மூலம் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.

துங்காவி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஆட்சியர் தெரிவித்ததாவது:
வேளாண்மைத்துறை வளர்ச் சிக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்கி வைக்கப்பட்டு அத்திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி வருகின்றன.

திட்டத்தின் முக்கிய நோக்கங் களாக, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர்ப் பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளை பொருள்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாகப் பண்ணைக்குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட் கட்டமைப்பை மேம்படுத்துதல்.

கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியைப் பெருக்குதல், வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல், -அடங்கல், சிறு-குறு உழவர்களுக்குச் சான்று வழங்குதல், கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல்.

பாசன நீர்வழித் தடங்களைத் தூர்வாருதல், உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டுக்காக அனைத்துத்துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும்.

மகசூல் பெருக்கம் – மகிழும் விவசாயி என்பதை நடைமுறைப் படுத்த, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம். ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவதே ஆகும்.

அந்த வகையில், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், துங்காவி ஊராட்சியில், கடந்த 2021&22ம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

துங்காவி கிராமத்தில் 200 பண்ணை குடும்பங்களுக்கு தலா மூணு தென்னங்கன்றுகள், ஐந்து விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான், 20 விவ சாயிகளுக்கு சிறுகுறு விவசாயிகளுக்கான பண்ணை கருவிகள், 33 விவசாயிகளுக்கு தார்பாலின், கைத்தெளிப்பான், ஐந்து விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான், வரப்பு பயிரில் உளுந்து சாகுபடி 50 ஏக்கர் பரப்பளவிற்கும், பசுமை போர்வை திட்டத்தின் கீழ் 8000 மரக்கன்றுகளும், தென்னையில் கருந்தலைபுழு மற்றும் வெள்ளை ரூடவ் கட்டுப்படுத்த ஏற்ற ஒட்டுண்ணிகள், கரும்பு உயிரினங்கள் உளுந்து மற்றும் பிற விதை விநியோகம் என மொத்தம் 420 விவசாயிகள் குடும்பத்திற்கு வேளாண்மை துறை மூலம் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத்.
ஆய்வின் போது, துணை இயக்குனர் (வேளாண்மை) சுருளியப்பன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், மடத்துக்குளம் உதவி இயக்குனர் ஆர்.ராஜேஸ்வரி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட னர்.

படிக்க வேண்டும்

spot_img