fbpx
Homeபிற செய்திகள்தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் ஒட்டகப் பால் பண்ணை

தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் ஒட்டகப் பால் பண்ணை

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பட்டதாரியான இவர் மக்களுக்கு பயன்பெரும் வகையில் ஒட்டக பால் பண்ணையை நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: நான் சர்க்கரை நோயினால் அவ திப்பட்டு வந்தேன். ஒட்டக பால் குடித்ததினால் தனக்கு நோயிலிருந்து தீர்வு கிடைத்தது.

தொடர்ந்து இது போல் மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என அரசு அனுமதிபெற்று குஜராத் பகுதியில் இருந்து 6 ஒட்டகம் கொண்டு வந்து நீலாம்பூரை அடுத்த குளத்தூர் பகுதியில் சங்கமித்ரா பண்ணை அ¬ மத்து பால் விநியோகம் செய்கிறேன்.

இதே போல் மருத்துவ பயன்பாட்டிற்காக ஒட்டக பால் வாங்க வரும் மக்களுக்கு சலுகை விலையில் கொடுத்து வருகிறேன்.

தென்னிந்தியாவில் முதல் முறையாக நான் இந்த முயற்சியை எடுத்துள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் ஒட்டக பண்ணை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து குஜராத் மாநில ஒட்டக ஆராய்ச்சியாளருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மணிகண்டன் கையெழுத்திட்டார்.

படிக்க வேண்டும்

spot_img