fbpx
Homeபிற செய்திகள்தேசிய சிலம்பம் போட்டியில் 11 பதக்கம் குவித்து கோவை மாணவர்கள் அசத்தல்

தேசிய சிலம்பம் போட்டியில் 11 பதக்கம் குவித்து கோவை மாணவர்கள் அசத்தல்

18-வது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கன்னியாகுமரியில் மார்ச் மாதம் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில் டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா, மத்தியபிரதேஷ், ஹரியானா, ஆந்திரா, உத்திரபிரதேசம், கேர ளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து 1250 க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் கோவை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட 13 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்கள் 3 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றனர்.

இதில் சிலம்பாலயா மற்றும் இம்மார்டல் ஸ்போட்ஸ் அகாடமி சார்பில் கலந்து கொண்ட மாண வர்கள் பெற்ற பதக்கங்கள் விவரம்:

மினி சப்-ஜூனியர் பிரிவில் வித்யா நிகேதன் சிபிஎஸ்இ பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர் கே.தரூன் இரட்டைகம்பு வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கமும் கம்பு சண்டை போட்டியில் வி.சி.வி. ஷிசு வித்யாலயா மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி கே.ஏ.நேகஸ்ரீ (யூகேஜி) வெள்ளி பதக்கமும் வென்றனர்.

கம்பு சண்டை பிரிவில் -ரங்கம்மாள் கல்வி நிலைய 6ம் வகுப்பு மாணவர் நவ்னீத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

சப்-ஜூனியர் பிரிவில் வி.சி.வி. ஷிசு வித்யாலயா மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி மாணவி கே.ஏ.நேத்ரா ஸ்ரீ இரட்டை வாள் வீச்சு போட்டியில் – தங்க பதக்கமும் ஒற்றை சுருள் வாள் வீச்சு பிரிவில் -நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி இ.வி.அக்ஷதா (7ம் வகுப்பு) தங்க பதக்கம் வென்றனர்.

ஜூனியர் பிரிவில் வி.கிரிஷ் ரோஷன் (டிரினிட்டி மெட்ரிக் பள்ளி) 50-55 கிலோ எடை பிரிவில் நேரடி சண்டையில் வெண்கலப் பதக்கமும் வி.மேரிபிரியதர்ஷினி (ஜிஆர்ஜி கிருஷ்ணம்மாள் மேல்நிலைப்பள்ளி பள்ளி) நேரடி சண்டையில் வெள்ளிப்பதக்கமும் கே.மித்ரா (ஜி.டி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி) 70கிலோ நேரடி சண் டையில் வெண்கலப் பதக் கமும் வென்றனர்.

சீனியர் பெண்கள் பிரிவில் வி.மிருதுளா ( ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி) குத்து வரிசையில் தங்க பதக்கம் வென்றார். சீனியர் ஆண்கள் பிரிவில் பி.நவீன் – 80 கிலோ பிரிவு கம்பு சண்டையில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஆயுதகோர்வை ஜோடி பிரிவில் டி.அருண் பாண்டியன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை சிலம்பாலயா ஆசிரியர் டாக்டர் செல்வக்குமார் மற்றும் பயிற்சி யாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார், பெற்றோர்கள் மற்றும் சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொதுநல அறக்கட்டளை புதிய நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்தினார்கள்.

இந்த போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை தமிழகமும், இரண்டாம் இடத்தை பாண்டிச்சேரியும், மூன்றாம் இடத்தை மகாராஷ்டிரா மாநிலமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img