fbpx
Homeபிற செய்திகள்தேசிய சிலம்பம், யோகா போட்டிகளில் வெற்றி: கோவை திரும்பிய சாதனை மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் மேளதாளத்துடன்...

தேசிய சிலம்பம், யோகா போட்டிகளில் வெற்றி: கோவை திரும்பிய சாதனை மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் மேளதாளத்துடன் வரவேற்பு

யூத் கேம் பெடரேசன் ஆஃப் இந்தியா சார்பில், யூத் கேம் சேம்பியன்சிப் என்ற போட்டிகளானது, டெல்லியில் கடந்த 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்றது. இதில், சிலம்பம், யோகா, வாலி பால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது,

இந்த போட்டிகளில் கோவை சூலூர் பகுதியில் உள்ள ரௌத்ரா சிலம்ப அகாடமியை சார்ந்த, 10 பேர் சிலம்பம் போட்டி களிலும் 4 பேர் யோகா போட்டிகளிலும் கலந்து கொண்டனர்.

அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, சிலம்பக லையில், 4 தங்கமும் 6 வெள்ளியும், யோகா போட்டியில் 4 தங்கமும் பெற்றனர், வெற்றி பெற்ற மாணவர்கள், இன்று ரயில் மூலமாக கோவை வந்தடைந்தனர், அவர்க ளுக்கு மேளதாளம் முழங்க மாணவர்களின் பெற்றோரால், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது.

இதன் தொடர்பாக செய்தியாளர்களிடம் சிலம்பம், மற்றும் யோகா ஆசிரியர்கள் வினோத் குமார், வெங்கடேஷ் கூறிய தாவது: சிலம்பம் யோகா போட்டிகளில் மட்டும் நாடு முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர், இதில் கோவை சூலூரை சார்ந்த ரௌத்ரா அகாடமி மாணவர்கள், 14 பேர் கலந்து கொண்டு 8 தங்கப்பதக்கங்கள் 6 வெள்ளிப்பதக்கங்கள் வென்றுள்ளனர்.

மேலும், இதற்காக மாணவர்கள் 2 ஆண்டுகள் பிரத்யேக பயிற்சிகளை அவர்கள் பெற்றனர். இதில் 9 வயது முதல் 27 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிலம்ப போட்டிகளை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்து கொண்டால், கோவை மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img