fbpx
Homeபிற செய்திகள்நோக்கியா சி01 பிளஸ் அறிமுகம்

நோக்கியா சி01 பிளஸ் அறிமுகம்

நோக்கியா போன்களில் இல்லமான எச்எம்டி குளோபல், நோக்கியா சி01 பிளஸ், தற்போது 32 ஜிபியுடன் வியத்தகு சிறப்பம்சங்களுடன் வெளியா கியுள்ளது. பழமையான, குறைந்த வேகத்தில் இயங்கும் போன்களுக்கு மாற்றாக மேன்மைப்படுத்தப்பட்ட போன் வாங்க விரும்புவோருக்கு நோக்கியா சி01 பிளஸ் ஒரு நம்பத்தன்மையான போன்.

ஓராண்டு வரை மாற்றத்தக்க உத்தரவாதம், ஜியோவின் தனித்து வமிக்க சலுகை, உடனடி ரொக்க சலுகை 600 ருபாய் உள்ளிட்டவை அறிமுக சலுகையாக பெறலாம்.

எச்எம்டி குளோபல் துணைத்தலைவர் சன்மீட் சிங் கோச்சர் றுகையில், “கடந்த பல ஆண்டுகளாக நோக்கியோ ஸ்மார்ட் போன் உருவாக்குவதிலும், வாடிக்கையாளர்களின் பன்னோக்கு வாய்ப்புமிக்க போன் தரவும் முனைப்பு காட்டினோம்.

இதன் விளைவாக, குறைந்த பட்ஜெட் விலையில் நோக்கியோ சி தொடர் உருவாகியுள்ளது. ஈடு இணையற்ற தரம், நீண்ட உழைப்பு, அதோடு நோக்கியா பொருட் களின் நம்பகத்தன்மை கொண்டது.

தற்போது அறி முகமாகியுள்ள வகை 32ஜிபி வரை சேமிக்கும் திறனும் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாகவும் திகழ்கிறது,” என்றார். நோக்கியோ சி01 பிளஸ், நீலம் மற்றும் சாம்பல் நிறங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இன்று முதல் கிடைக்கும் இந்த போன், 2/16ஜிபி மற்றும் 2/32 ஜிபி அமைப்புடன் ஆரம்ப விலையாக 6299 மற்றும் 6799 ரூபாயில் கிடைக்கிறது. சில்லறை விற்பனை கடைகளிலும், மின் வணிக தளங்களிலும், நோக்கியா.காம் இணையத்தளத்திலும் பெறலாம்.

ஜியோ தனித்துவமிக்க சலுகையில் 600 ருபாய் சலுகையை பெறலாம். மைஜியோ செயலி வழியில் இதை பெறலாம்.

ஜியோ வாடிக்கையாளர்கள் 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, 4000 ருபாய் வரை, மின்ட்ரா, பார்ம்இஸி, ஒயோ மற்றும் மேக்மைட்ரிப் போன்றவற்றில் சலுகை பெறலாம்.

படிக்க வேண்டும்

spot_img