fbpx
Homeதலையங்கம்பவானி தேவிக்கு முதல்வர் நிதியுதவி

பவானி தேவிக்கு முதல்வர் நிதியுதவி

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் வால்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விளையாட்டு துறைக்கு முதல்வர் அளித்துள்ள ஊக்கத்தை பாராட்டுகிறோம்.

பாவானி தேவிக்கு ஏற்கெனவே உலகில் பல இடங்களில் நடந்த வால்வீச்சு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது ஜப்பான் நாட்டில் நடைபெற இருக்கும் வால்வீச்சு போட்டியில் கலந்து கொள்கிறார்.

இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வால்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. இவருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் இந்திய அரசு செய்து வருகிறது.

தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி செய்து வருகிறார். மேலும் சில பயிற்சிகள் பெற தமிழக அரசிடம் ரூ.5 லட்சம் நிதியுதவி கேட்டிருக்கிறார்.

அவரின் கோரிக்கையை கனிவாக பரிசீலனை செய்த முதலமைச்சர் அவரை ஊக்குவிக்கும் வகையில் அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வீராங்கனை பவானி தேவி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இத்தாலியிலிருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் எனது பயிற்சிக்காக தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img