தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறை யாக தனி விமானத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.
டெல்லி சென்றடைந்த அவரை, விமான நிலையத் தில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உற்சாகமாக வர வேற்றனர்.
பின்னர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து டெல்லியில் தயாராகும் திமுக அலுவலகத்தை ஆய்வு செய்த பின், சாணக்கியாபுரத்தில் உள்ள தமிழ்நாடு பொதிகை இல்லத்திற்கு வந்தடைந்தார்.
அங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
எம்.பிக்கள் பூங்கொத்து கொடுத்து வர வேற்றனர்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அணி வகுப்பு மரியாதை கொடுக் கப்பட்டது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.
இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தச் சந்திப் பின் போது நதிநீர் இணைப்பு, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை, நீட் தேர்வு ரத்து, ஹைட்ரோ கார்பன் திட்டம், 7 பேர் விடுதலை, போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்கிறார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்தின் சார்பிலான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார்.
அரசு ரீதியான சந்திப்புகளுக்குப் பிறகு, அரசியல் தொடர்பான சந்திப்புகளை மேற்கொள்கிறார்.
அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து நாளை (வெள் ளிக்கிழமை) அவர் தமிழகம் திரும்புகிறார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலி னுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளும் சென்றுள்ளனர்.