fbpx
Homeபிற செய்திகள்பிரத்யேக சுற்றுச்சூழல் கவுன்சில்: மாநில அரசுகள் வலியுறுத்தல்

பிரத்யேக சுற்றுச்சூழல் கவுன்சில்: மாநில அரசுகள் வலியுறுத்தல்

பருவநிலை நடவடிக்கைகளின் செயல்படுத்தல் அம்சங்கள், தணிப்பு, தழுவல், பின்னடைவு ஆகியவை பெரும்பாலும் மாநில அரசுகளின் மீது விழுகின்றன என்பதை டெல்லியில் நடைபெற்ற உலக நிலை யான வளர்ச்சி உச்சி மாநாட்டில்(WSDS) சுட்டிக் காட்டினர்.

இதில் பங்கேற்ற மாநில அமைச்சர்கள், மத்திய மற்றும் மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட பிரத்யேக சுற்றுச்சூழல் கவுன்சிலை அமைக்க வேண்டும் என்னும் யோசனையை முன்வைத்தனர்.

தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் (TERI) வருடாந்திர முதன்மை நிகழ்வில், பசுமை வளர்ச்சிக்கான தேசிய துணை நிர்வாகம் குறித்த அமைச்சக அமர்வில் மகாராஷ்டிர அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்ய உத்தவ் தாக்கரே பேசுகையில், ஜிஎஸ்டி கவுன்சிலை போன்று, ஒரு கவுன்சிலில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருடன் அனைத்து மாநிலங்களின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைஅமைச்சர்கள் இருந்தால், தேசிய அளவில் இலக்குகளையும் கொள்கைகளையும் நிர்ணயித்து மாநிலத்தில் செயல்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

தமிழக நிதியமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், உள்ளாட்சி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய தே¬ வகள் ஏராளம் உள்ளன. தேசிய அளவில் கொள்கைகள் வகுக்கப்பட்டாலும், பெரும்பாலான வேலைகள் இந்த மட்டங்களில் செய்யப்பட வேண்டும்.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கும் பசுமை வளர்ச்சிக்கு உதவுவதற்கும் தேசிய துணை நிர்வாகத்தின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது என்றார்.

தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்டின் (TERI) டைரக்டர் ஜெனரல் டாக்டர் விபா தவான் மற்றும் அதன் சிறப்பு கூட்டாளர் அஜய் சங்கர், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் இந்தியாவின் நாட்டின் இயக்குநர் அதுல் பகாய் ஆகியோர் இந்த அமர்வில் நடுநிலையாளர்களாக இருந்தனர்.

மாநிலங்கள், பசுமைப் பொருளாதாரத்திற்கான மாவட்ட அளவிலான வரைபடங்களை வரையவும், பசுமை பட்ஜெட்டை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

இந்த அமர்வில், காலநிலை மாற்றம் தொடர்பான பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும் அவற்றைச் சமாளிப்பதற்கும் புதிய நடவடிக்கைகள் மற்றும் அளவுகோல்களின் அவசியத்தை அமைச்சர்கள் எடுத் துரைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img