fbpx
Homeபிற செய்திகள்பெட்ரோல் டீசல் விலையை குறைக்க சர்வதேச உரிமைகள் கழகம் கோரிக்கை

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க சர்வதேச உரிமைகள் கழகம் கோரிக்கை

தர்மபுரி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை நிலைய செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் நிறுவனர் பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் மாற்று திறனாளிகள் பொருளா தார மேம்பாட்டிற்கு உறு துணையாக செயல்படுகிறோம்.

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்களை மாற்றுதிறனாளிகளுக்காக ஏற்படுத்தி தர வேண்டும். மனித உரிமை பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து தீர்வு காண்கிறோம்.

தமிழகத்தில் கொரோனா முடிந்து தற்போது தான் சராசரி வாழ்க்கைக்கு மக்கள் வந்துள்ளனர். மின்சார கட்டணம் ஏழை எளிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது. எனவே மின் கட்டண உயர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்கவேண்டும்.

ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உக்ரைன் போர் விஷயத்தில் ஒன் றிய அரசு தலையிட்டு ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தபோதும், கஞ்சா தடுப்பு நடவடிக் கைகளை முழுவீச்சில் முடுக்கி விட வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில், தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் வினோத், சரவணன், அப்துல்கலீம், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், துணை தலைவர் வெங்கடேசன், மாநில பொறுப்பாளர் தளபதி கிஷோர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் ஞானப்பிரகாசம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img