fbpx
Homeபிற செய்திகள்பெண் பணியாளர்களுடன் இணைந்து மரக்கன்று நடவு செய்த கோவை ஆட்சியர்

பெண் பணியாளர்களுடன் இணைந்து மரக்கன்று நடவு செய்த கோவை ஆட்சியர்

மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுடன் இணைந்து மரக் கன்றுகளை நட்டனர்.

உலக மகளிர் தினம் மார்ச் 8 கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணி யாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் ஆட்சியர் அலுவலக வளா கத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வில்வமரம், மகிழமரம் உட்பட5வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர், காவல் கண் காணிப்பாளர் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மகளிர் தினத்தில் மரக் கன்று நடும் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img