fbpx
Homeபிற செய்திகள்பெண்களின் வாழ்க்கை தரம் உயர்த்தும் வாக்கரூவின் ‘உயர்வு’ திட்டம்

பெண்களின் வாழ்க்கை தரம் உயர்த்தும் வாக்கரூவின் ‘உயர்வு’ திட்டம்

வாக்கரூ குழுமத்தின் ஒரு அங்கமாக திகழும் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு அமைப்பான வாக்கரூ அறக்கட்டளை, சரணாலயம் என்னும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ‘உயர்வு’ என்னும் திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டம் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி வசந்த் ராம்குமாரால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சரணாலயம் வளாகத்தில் ஆதரவற்ற பெண்களை சமூக மற்றும் பொருளாதார அளவில் மேம்படுத்தும் விதமாக தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு, துணி பைகளை நெசவு செய்யவும், ஸ்கிரீன் பிரிண்டிங் செய்யவும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் சமூகப் பொருளாதார மேம்பாட்டை குறிப்பாக ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் வகையில் வாக்கரூ அறக்கட்டளை பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

உயர்வு திட்டத்தில் வாக்கரூ குழும நிர்வாக இயக்குனர் நவ்ஷாத், இக்குழுமத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு தலைவர் சுமித்ரா பினு, சரணாலயம் நிறுவனர் வனிதா, அறங்காவலர் சரண்யா மற்றும் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர்.

இது குறித்து நிர்வாக இயக்குனர் நவ்ஷாத் கூறுகையில், இந்த “உயர்வு” திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

எதிர் காலம் நம் அனைவருக்கும் சொந்தமானது என்று வாக்கரூ அறக்கட்டளை உறுதியாக நம்புகிறது. அத்துடன் இந்த அறக்கட்டளை சமத்துவமான சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img