fbpx
Homeபிற செய்திகள்பொன்னேரி அருகே மெதூர், கோளூர் கூட்டுறவு வங்கியில் 2.54 கோடி நகைகடன் தள்ளுபடி

பொன்னேரி அருகே மெதூர், கோளூர் கூட்டுறவு வங்கியில் 2.54 கோடி நகைகடன் தள்ளுபடி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மெதூர், கோளூர் பகுதி யில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது.

இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் 629 பயனாளிகள் தங்களது நகைகளை அட மானம் வைத்து கடன் பெற்றிருந்தனர். இதன் மதிப்பு சுமார் 2 கோடியே 54 லட்சத்து 53 ஆயிரம் ஆகும்.

இந்நிலையில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இச்சங்கத்தில் கடன் பெற்றிருந்த பய னாளிகளின் கடனை தள் ளுபடி செய்து நகைகளை தரமுடிவு செய்தது. இதற் கான நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ரவி, ஒன்றிய செயலர் சுகுமாரன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோளூர் கதிரவன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மெதூர் முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கதிரவன், ஜமு னா ரஜினி, காணியம் பாக்கம் ஊராட்சிதலைவர் ஜெகதீசன், கோளூர்ஊரா ட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயசித்ராசிவராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மெதூர் ரமேஷ், ஆவூர் அருள் மீஞ்சூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், வங்கி செயலர் மெதூர் சசி குமார், தலைவர் ரவிச்சந்திரன், கோளூர் வங்கி செயலர் திருப்பதி, மெதூர் கூட்டுறவு சங்க தலைவர் ரவீந்திரன், துணைத் தலைவர் செல்வம், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பய னாளிகளுக்கு அவர்கள் அடமானம் வைத்திருந்த நகைகளை திரும்ப அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img