fbpx
Homeபிற செய்திகள்போதைப் பொருள் விழிப்புணர்வுக்காக கோவை இளைஞர் சைக்கிள் பயணம்- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டு

போதைப் பொருள் விழிப்புணர்வுக்காக கோவை இளைஞர் சைக்கிள் பயணம்- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டு

போதைப் பொருள் விழிப்புணர்வுக்காக கோவை இளைஞர் 1000 கிலோ மீட்டர் தூரத்தை 37 மணி நேரம் 53 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். அவரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. போலீசார் தனிப்படை ரோந்து மூலம் போதை பொருள் விற்பனை தடுப்பபு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். போதை பொருள் பழக்கத்தின் பயன்பாட்டை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த விஷ்ணு ராம் தனது புதிய சாதனை மூலம் போதைப் பொருள் இல்லா தமிழகம் எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன் படி 1000 கிலோ மீட்டர் தூரத்தை 37 மணி நேரம் 53 நிமிடங்களில் சைக்கிளில் பயணித்து சாதனை செய்துள்ளார்.

ஹைதரபாத்தில் தனது சைக்கிள் பயணத்தை துவக்கிய விஷ்ணுராம் கர்னூல், பெங்களூரு வழியாக கோவை வந்தடைந்தார். கோவை வந்த விஷ்ணுராமை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து அவருடன் ஏர்போர்ட் பகுதியிலிருந்து அவினாசி சாலை வழியாக காவல்துறை ஆணையர் அலுவலகம் வரை ஆணையர் சைக்கிள் ஓட்டியபடி வந்தார். சைகிளர்ஸ், பொது மக்களும் சைக்கிள் ஓட்டி பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

இது குறித்து விஷ்ணுராம் கூறுகையில் அண்மையில் முதல்வர் கூறிய போதைப்பொருள் இல்லா தமிழகம் எனும் பிரச்சாரத்தை வலியுறுத்தும் விதமாக இந்த சாதனை பயணத்தை துவங்கியதாக தெரிவித்தார்.

குறைந்த நேரத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணம் மூலம் கடந்து சாதனையை விஷ்ணு ராம் படைத்ததாக இண்டியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் தந்திருக்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img