fbpx
Homeபிற செய்திகள்மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்: வீடு தேடிச்சென்று மு.க.ஸ்டாலின்...

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்: வீடு தேடிச்சென்று மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினார்.

மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடி, 188 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையையும் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் 5.8.2021 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 258 கோடி ரூபாய் செலவில் “மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்” என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து, முதல் பயனாளியின் இல்லத்திற்கு நேரில் சென்று மருந்துப் பெட்டகத்தை வழங்கினார்.

தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் வடிவ மைக்கப்பட்டு, களப்பணி யாளர்கள் மூலம் பயனாளி களின் இல்லங்களிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப் படுகின்றன.

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்ப டுத்தப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, இன்று கிராமப் பகுதிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரையுள்ள அனைத்து பகுதிவாழ் மக்களும் பயன்பெறும் வகையில், பெண் சுகாதாரத் தன்னார் வலர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகிய களப்பணியாளர்கள் மூலம் சேவைகள் வழங்கப் படுகின்றன.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒவ்வொரு பயனாளியும் மக்கள் நலப் பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவது இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.


“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் கள அளவில் 10,969 பெண் சுகாதாரத் தன்னார் வலர்கள், 385 இயன்முறை மருத்துவர்கள், 385 நோய் ஆதரவுச் செவிலியர், 4848 இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் ஆகியோர் சேவைகளை வழங்குகின்றனர்.

மேலும், அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் 2432 ‘மக்களைத் தேடி மருத்துவ செவிலியர்கள்’ தொற்றா நோய் சேவைகளை வழங்குவதோடு, களஅளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு தொற்றா நோய்களுக்கான தொடர் சேவைகளை வழங்குகின்றனர்.

இந்த நிலையில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப் பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கி, அவருக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை பார்வையிட்டார்.

மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடிச் சென்று மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

மேலும் ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் 188 அவசரகால ஊர்தியின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விபத்தில் சிக்குவோருக்கு உடன டியாக மருத்துவ சிகிச்சை அளிப்பது முதல், மருத்துவ சிகிச்சைகளை முறையாக பொதுமக்களுக்கு வழங்க ஆம்புலன்சின் தேவை என்பது அதிகரித்திருக்கிறது.

இந்த சூழலில், ஒரு விபத்து ஏற்படக்கூடிய இடத்தில் உடனடியாக சிகிச்சை வழங்குவதற்காக உயிர்காக்கும் வகையில் ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் மூலமாக உயிர்காக்கும் உபகரணங்களுடன் கூடிய 188 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார்.

ஒரு செவிலியர், உதவி யாளர், ஓட்டுனரை உள்ளடக்கி இந்த 108 ஆம்புலன்ஸ்கள் செயல்ப டும். இதன் மூலம் தமிழகத்தில் செயல்படும் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை என்பது 1491-ஆக அதிகரித்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ் ணன், இப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

இதற்கு முன்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டிக்கு மருந்து பெட்டகம் வழங்கி முதலமைச்சர் நலம் விசாரித்தார்.

தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 50 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்

படிக்க வேண்டும்

spot_img