fbpx
Homeதலையங்கம்மதுரை எய்ம்ஸ் -ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மை?

மதுரை எய்ம்ஸ் -ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மை?

பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசத்தில் நேற்று ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த மருத்துவமனைக்கு 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1470 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இமாசல பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பணியை மளமளவென செய்து முடித்து திறந்தும் வைத்து விட்டனர்.

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு அதாவது பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 15 மாதம் கழித்து பிரதமர் மோடியால் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது வரை அங்கு சுற்றுச் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி என எதுவுமே நடைபெறவில்லை. வெறும் பொட்டல் காடாகவே காட்சி தருகிறது.
ஒன்றிய அரசின் திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது.

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்து விட்டதாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். அது உண்மை தான் என்பதையே மதுரை எய்ம்ஸ் திட்டம் நமக்கு உணர்த்துகிறது.

ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மை? மதுரைக்கு எப்போது விமோசனம் கிடைக்கும்?

படிக்க வேண்டும்

spot_img