fbpx
Homeபிற செய்திகள்மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

கோவை கேபிஆர் குழுமங்கள், மத்திய சுழற்சங்கம் மற்றும் அரசூர் ஊராட்சி, வனம் இந்தியா பவுண்டேசன் இணைந்து நடத்திய மரக்கன்று நடும்விழா அரசூர் ஊத்துப்பாளையம், செட்டிக்குட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி ஐயா தலைமை வகித்தார். கோயம்புத்தூர் மத்திய சுழற்சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார்.

மத்திய சுழற்சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ராஜசேகர் ஸ்ரீநிவா சன் முன்னிலை வகித்தார். அரசூர் ஊராட்சிமன்ற தலைவர் முனைவர் ஏவிஜி மனோன்மணி ஏற்புரை வழங்கினார்.

கணியூர் ஊராட்சித்தலைவர் வேலுசாமி மற்றும் கோயம்புத்தூர் மத்திய சுழற்சங்கத்தின் செயலாளர் பயூஸ்பட்வா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அரசூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஏவி கோவிந்தராஜ், சூலூர் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் முனைவர் ஏவிஏ செல்வநாயகி அன்பரசு ஆகியோரும் உரையாற்றினர்.

வனம் இந்தியா பவுண்டேசன் செயலாளர் ஸ்கை வி சுந்தரராஜ் பேசு¬ கயில், மனித வாழ்விற்கு வனமே ஆதாரம் என்றும் மழைநீர் பருகுவதின் அவசியம் குறித்தும் விளக்கினார்.கேபிஆர் மில் நிறுவன தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

ஊத்துப்பாளையம், செட்டிக் குட்டையில், விழாவின் அங் கத்தினர்கள், மரக்கன்றுகள் நட்டு வருங்கால சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டனர்.

இந்நிகழ்வில் மத்திய சுழற்சங்க உறுப்பினர்கள், கேபிஆர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கேபிஆர் குழுமஊழியர்கள், ஊர் பொதுமக்கள், இயற்கைஆர்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img