fbpx
Homeபிற செய்திகள்மாநில வளர்ச்சிக்கு பங்காற்ற தயார்-வானதி சீனிவாசன்

மாநில வளர்ச்சிக்கு பங்காற்ற தயார்-வானதி சீனிவாசன்

எந்தெந்த வகையில் எல்லாம் மத்திய அரசின் உதவியை பெற முடியுமோ, அந்த வகையில் மாநில வளர்ச்சிக்கு பங்காற்றுவோம் என்று கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனுக்கு கட்சி தொண்டர்களால் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் எனக்காக வாக்களித்த, தேர்தல் பணியாற்றிய பாஜக, அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு நன்றிகள்.

இந்த பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பெரிதும் உதவிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அம்மன் கே. அர்ஜூனன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

என்னை போலவே வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாழ்த்துகள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள்.

ஆக்கப்பூர்வமான வகையில் எந்தெந்த வகையில் எல்லாம் மத்திய அரசின் உதவியை பெற முடியுமோ, அந்த வகையில் மாநில வளர்ச்சிக்கு பங்காற்றுவோம்.

தேர்தல் அறிக்கையில் சொன்னதை எல்லாம் மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசின் உதவியுடன் செய்வோம் என கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img