fbpx
Homeபிற செய்திகள்மாஸ்டர்கார்டின் ‘அன்புடன் இலங்கை’ அழைப்பு இந்திய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கிறது

மாஸ்டர்கார்டின் ‘அன்புடன் இலங்கை’ அழைப்பு இந்திய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கிறது

இலங்கையில் நிலைமை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருவதால், மாஸ்டர் கார்டு ‘அன்புடன் இலங்கை’ என்கிற விளம்பர முன்னெடுப்பை துவங்கியுள்ளது.

இதன்மூலம், இந்த அழகிய தீவு தேசம் வழங்கும் பரந்த அளவிலான மறக்க முடியாத அனுபவங்களைப் பெற இந்திய சுற்றுலாப் பயணிகளைஅங்கு சுற்றுலா செல்ல ஊக்குவிக்கிறது.

விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்திய சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக இலங்கையை உருவாக்குவதற்காக ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் போன்ற 50-க்கும் மேற்பட்ட வணிகப் கூட்டாளர்களுடன் மாஸ்டர்கார்டு இணைந்துள்ளது.

மாஸ்டர்கார்டின் சிறப்பு வலைதளமான ப்ரைஸ்லெஸ் ஸ்பெஷல்ஸில், இலங்கைசுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ள மாஸ்டர் கார்டு வைத்திருப்போர் பல்வேறு ஆதாயங்களை வழங்கும் தொகுப்பு சலுகைகளைப் பெறலாம்.

இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறுகையில், “தனித்துவமான அனுபவங்கள், கலாச்சார ஒற்றுமை, அருகாமை, ஏற்புடைய விலைவாசி ஆகியவற்றின் சரியான கலவையாக இருப்பதால், இந்தியப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான சர்வதேச சுற்றுலாத்தலமாக இலங்கை உள்ளது.

இதற்கு மேல், மாஸ்டர்கார்டின் ‘ஸ்ரீ லங்கா வித் லவ்’ விளம்பர முன்னெ டுப்பானது, இந்திய சுற்றுலாப் பயணிகள் அவர்களது பயணத்தின் போது மேற் கொள்ளும் செலவுகளுக்கு ஈடாக மேலும் அதிக மதிப்புள்ள ஆதாயங்களை வழங்கவுள்ளது.

பாதுகாப்பான மற்றும் கட்டுப்படியாகக் கூடிய சுற்றுலாத்தலமாக இலங்கையின் மீதுள்ள நம்பகத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு இந்த கூட்டணி பெரிதளவில் நீண்ட காலத்திற்கு உதவுமென நம்புகிறோம்,” என்றார்.

மாஸ்டர்கார்டு நிறுவனத்தின், தெற்கு ஆசிய, தலைமை ஆப்பரேட்டிங் அலுவலர் விகாஸ் வர்மா கூறியதாவது: இலங்கை வழங்கும் அசல் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அனுபவங்கள் இத்தீவு நாட்டை மிகவும் விரும்பத்தக்க விடுமுறை சுற்றுலா தலங்களுள் ஒன்றாக உருவாக்கியுள்ளன.

இலங்கையில் சமூகப் பொருளாதார நிலைமைகள் மேம்பட்டுவருவதால், மாஸ்டர்கார்டு நிறுவனம்இந்தியாவில் உள்ள மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வெகுமதிகள், அனுபவங்களை வழங்கும் சலுகைகளை அளித்து, அவர்கள் மீண்டும் இலங்கைக்கு பயணிக்க, அல்லது முதல் தடவை சுற்றுலா செல்லவும் ஊக்குவிக்கிறது என்றார்.

2018-ம் ஆண்டு முதல், மாஸ்டர்கார்டு நிறுவனம் இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு அமைப்பான SLTPB-யுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img