fbpx
Homeபிற செய்திகள்மிலாப் தரும் வாக்குறுதி

மிலாப் தரும் வாக்குறுதி

இந்தியாவின் முன்னணி கிரவுட்ஃபண்டிங் தளமான https://milaap.org/ ஆன் லைன் நிதியுதவி அளிக்கும் செயல்பாட்டில் மிலாப் கியாரண்டி என்கிற கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சி, இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைப்படி அரிதாக ஒரு நிதிதிரட்டுபவர் மோசடியாக நிதிதிரட்டினால், நிதி அளித்தவர்களுக்கு முழுமையாக பணத்தைத் திரும்ப அளிப்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு முறையும் சரியான பயனாளிகளுக்கே நிதியுதவி சென்றுசேர்வது உறுதிப்படுத்தப்படுகிறது.
மிலாப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான அனோஜ் விஸ்வநாதன் கூறுகையில், “மிலாப் கியாரண்டி மூலம், ஒரு நன்கொடையாளர் தரும் ஒவ்வொரு ரூபாயும் சரியான நபருக்கும், சரியான நோக்கத்துக்கும் சென்றடைவதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என்றார்.

70 லட்சம் பயனாளர்களின் நம்பிக்கையை ஏற்கெ னவே பெற்றுள்ளதுபோல், நிதியுதவி வழங்குவதற்கு மிகவும் பாதுகாப்பான, உத்தரவாதமான தளம் மிலாப்.
ஒட்டுமொத்த நிதிதிரட்டுதலில் மோசடி நிதிதிரட்டுபவர்கள் 0.1 சதவீதத்தைவிடவும் குறைவாகவே இருப்பார்கள். எங்களுடைய புதிய கொள்கையின்படி, மோசடியாக நிதிதிரட்டுபவர்கள் கண்டறியப்படும்போது, அவர்கள் திரட்டிய முழு நிதியையும் நன்கொடையாளர்களுக்குத் திருப்பி வழங்கியாக வேண்டும். ஒரு நிதிதிரட்டும் பிரசாரத்தில் ஏற்படும் இது சார்ந்த குறைபாடுகளைத் தடுக்கும் வகையில் நிதியை திரும்ப அளிப்பதற்கான உத்தரவாதத்தை மிலாப் வழங்குகிறது.

மருத்துவ நிதி திரட்டுபவர்களுக்கு முதலிலும், பிறகு கல்வி, மற்ற சமூகத் தொண்டுகளுக்கும் மிலாப் கியாரண்டி அறிமுகப்படுத்தப்படும்.

படிக்க வேண்டும்

spot_img