fbpx
Homeபிற செய்திகள்முல்லை, மார்ஷியல் ஆர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவி சிலம்பபோட்டியில் சாதனை- இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்...

முல்லை, மார்ஷியல் ஆர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவி சிலம்பபோட்டியில் சாதனை- இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்

கோவை சின்ன வேடம் பட்டி பகுதியில், கடந்த 8 ஆண்டுகளாக, பள்ளி மாணவ மாணவிகளுக்கு, சிலம்ப கலையை கற்று தருவது மட்டுமில்லாமல் மாணவ, மாணவிகள், கற்று கொண்ட கலையை, அனைவரும் பாராட்டும் வகையில், பல்வேறு முயற் சிகளின் அடிப்படைகளில், சாதனைகளாகமாற்றி அனைவரும் வியந்து போற்றும் வகையில் சாதனை பக்கங்களில் இடம் பிடிக்க செய்து வருகின்றனர்.

இதன் ஓரு பகுதியாக, சின்னவேடம் பட்டி, விநாயகர் கோவில் வளாகத்தில், சின்னவேடம் பட்டியை சேர்ந்த பால சுப்பிரமணியம், சத்ய பிரியா தம்பதியினரின், 11வயதான மகளும்,முல்லை, மார்ஷியல் ஆர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவியுமானமௌனிகா, கடந்த நான்கு ஆண்டுகளாக சிலம்பக்கலைகளை கற்று வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை, பெருமைப்படுத்தும் விதமாக, கால்களை விரித்தபடி தத்தி, தத்தி 50 மீட்டர் தொலைவை ஓரு கைகளில் சிலம்பம் சுற்றிய படி, 2 கிலோ மீட்டர் தூரத்தை, சுமார், இரண்டு மணி நேரம், 8 நிமிடங்களில் செய்து, நாட்டில் யாரும் இதுவரை செய்யாத புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறு வனம் அங்கீகரித்துடன், அதற்கான சான்றிதழ்களை யும் வழங்கி பெருமைப்ப டுத்தி உள்ளது, இந்த நிகழ்ச்சியில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதாம் ஹுசைன், மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கோவை மாவட்ட தலைவர், பிரகாஷ் ராஜ், அதற்கான சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சர்வ தேச நடுவர்களாக, பிரதீபா, பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஹைவே கன்ட்ரோலர் சுந்தரம், கோவை மாநகராட்சி உறுப்பினர் ராமமூர்த்தி, துணை பயிற்சியாளர் கார்த்திக் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரி வித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img