கடந்த இரண்டு ஆண்டாக பள்ளி, புத்தகம், படிப்பு ஆகியவற்றை மாணவர்கள் மறந்தே போய்விட்டார்கள். இந்நிலையை மாற்ற படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலியோ சொட்டுமருந்து போன்று கொரோனா தடுப்பூசி முகாம் அனைத்து இடங்களிலும் நடத்தப்பட வேண்டும். இதற்கு தேவையான மருந்தை மருந்து நிறுவனங்களை தயாரிக்க ஊக்கப்படுத்தி கொள்முதல் செய்து மத்திய அரசு மாநிலங்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால் அடுத்த 3 மாதங்களுக்குள் 3வது அலையை எதிர்கொள்ள அனைவரும் உடலாலும், உள்ளத்தாலும் தயாராகி விட முடியும். இந்த தடுப்பு நடவடிக்கையை அரசு மட்டும் தனித்து செயல்படுத்தி விட முடியாது. தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரி கள், சமூக அமைப்புகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் நிச்சயம் சாத்தியப்படும்.
மேலும் இப்போதிருந்தே குழந்தைகள் மீது அவர்கள் குடும்பத்தினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். குழந்தையின் உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து குழந்தை நல மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை, மருந்தை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் அதிக உள்ளது. எனவே அதை தவிர்க்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று கவனித்து முன்னெச்சரிக்கையாக மருத்து வம் மேற்கொள்ளவேண்டும்.
இதனால் 3வது அலையின் போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். குழந் தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுடன் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பில் இருந்து அனைவரும் தப்பித்து கொள்ள முடியும்.