fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்க வேண்டும்- கோவை மாவட்ட வனத்துறை...

மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்க வேண்டும்- கோவை மாவட்ட வனத்துறை வலியுறுத்தல்

உலக வன உயிரின வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது. கோவை மேட்டுப்பாளையம் கல்லார் வனச்சாலையில், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடந்தது.

ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி, கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் தலைமையில், வனச்சாலைகளில் வன உயிரினங்கள் சாலை விபத்தில் இறப்பதை தடுக்கும் விதமாக Stop Roadkill சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மனித சங்கிலி நிகழ்ச்சி நடை பெற்றது.

கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கூறிய தாவது: ஒவ்வொரு வருடமும் அக் டோபர் 2 முதல் 8-ம் தேதி வரை உலகம் முழுவதும் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் – குன்னூர், ஊட்டி – சாலையின், இருபுறமும் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், ஏராளமான குரங்குகள் உள்ளன. இவை, சாலையோரங்களில் உள்ள கல்வெட்டு, திட்டுகளில் அமர்ந்து கொள்வதும், அவ்வழியாக வாகனங்களில், வரும் சுற்றுலாப் பயணிகள் கொடுக்கும் உணவு பண்டங்களை ருசி பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.

உணவை எதிர்பார்த்து சாலைக்கு வரும் குரங்குகள், வாகனங்களில் அடிபட்டு காயம டைகின்றன. சில வேளைகளில் பலியாகின்றன. அதனால், வாகனங் களில் அடிப்பட்டு குரங்குகள் பலியாவதை தவிர்க்க, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சாலையில் உணவளிப்பதை தவிர்க்க வேண்டும். சாலையில் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும் என்றார்.

வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி சிராஜ்தீன் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் காடுகளை கொண்டுள்ளதால், இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன.

குறிப்பாக, குரங்குகள் அதிகளவில் உள்ளன. குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையில் செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை சாலையிலே அமர்ந்து விடுகின்றன.

இதனால் அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறக் கின்றன. இதனை தடுக்க வனத் துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

ஆனால் பொதுமக்களும் தொடர்ந்து வன விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர். வனங்களின் ஆரோக்கியத்திற்கு வன உயிரினங்களின் பங்கு மிக முக்கியமானது.

ஆகையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் சாலையில் உணவளிப்பதை தவிர்க்க வேண்டும். சாலையில் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு வனத்துறை, வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT)இணைந்து, குமரன் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள், உதவி வனப் பாதுகாவலர் செந்தில் குமார், வனச்சரகர்கள் ஜோசப், செந்தில் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img