fbpx
Homeபிற செய்திகள்யுனைட்டட் பப்ளிக் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள் பரிசு

யுனைட்டட் பப்ளிக் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள் பரிசு

பெரியநாயக்கன் பாளை யத்தில் செயல்பட்டுவரும் தி யுனைட்டட் பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் இருந்து 470 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற இப்போட்டியானது 4 பிரிவுகளில் நடைபெற்றது. 9, 12 , 15 மற்றும் 18 வயதுக் குட்பட்ட மாணவர்கள் பங்குபெற்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற மாணவர்களுக்கு செஸ் கடிகாரம், 3 முதல் 15 இடங்கள் பிடித்த மாண வர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

9 வயதுக்கு உட்பட்ட பிரிவில் முதலிடத்தை ரோகன் பாலா, ராக்ஸ் பள்ளிக்கூடம் ,இரண்டா மிடத்தை தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் மாணவன் பிரணவ சந்தோஷ் மற்றும் மூன்றாவது இடத்தை சம்யுக்தா டாக்டர் வி கெங்குசாமி நாயுடு மெட்ரிகுலேஷன் ஸ்கூல், 12 வயதுக்குட்பட்ட மாண வர்கள் பிரிவில் ஸ்ரீ ஹரி ஆனந்தன், விசிவி சிசு வித்யோதயா முதலிடத் தையும், சுதீஷ், பீப்பிள் புரோட்கி, தேவதர்ஷன், சுகுணா பள்ளி மாண வர்கள் பெற்றனர்.

15 வயதிற்குட்பட்ட மாணவர் கள் பிரிவில் முதலிடத்தை ராகுலும் இரண்டாம் இடத்தை அபிலாஷ், லெஃப் மெட்ரிகுலேஷன் ஸ்கூல், மூன்றாம் இடத்தை ஹரித் அமிர்த வித்யாலயம், 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் எதன் வி ஜான்சன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன், இரண்டாமிடத்தை எஸ் பி ஓ ஏ பள்ளி மாணவன் அறிவரசு, மூன்றாம் இடத்தை அமிர்த வித்யாலயம் நல்லாம் பாளையம் மாணவன் முரளி சங்கர் ஆகியோர் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு யுனை டெட் கல்வி நிறுவனங்க ளின் தாளாளர் சண்முகம், மைதிலி சண்முகம், இயக்குனர் கைலாஷ், அறங்காவலர் அருண் கார்த்திகேயன் மற்றும் கோயம்புத்தூர் எலைட் ரோட்டரி சங்க தலைவர் சுஜாதா, அகில இந்திய ஆர்பிட்டர் விஜயராகவன், கோயம்புத்தூர் செஸ் அசோஷியேஷன் செயலர் தனசேகர் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img