fbpx
Homeபிற செய்திகள்ரத்தினம் கலைக்கல்லூரிக்கு உயர் தர மதிப்பீடு

ரத்தினம் கலைக்கல்லூரிக்கு உயர் தர மதிப்பீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில் முதன் முதலாக, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழு A++ என்ற தரமதிப்பீடு அளித்துள்ளது.

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழு, மூன்றாவது சுழற்சியில் CGPA-3.6 மதிப்பீடு வழங்கி, A++ என்ற தர மதிப்பீடு அளித்துள்ளது.

இதன் மூலம் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில் NAAC A++ தரம் பெற்ற முதல் கல்லூரியாகவும், தமிழ்நாடு அளவில் 15 உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஒன்றாகவும், இந்திய அளவில் 49 உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும் NAAC இடம் பெற்றுள்ளது.

அசாம் திப்ருகார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கந்தர்ப்ப குமார் தேகா, கர்நாடகா குல்பர்கா பல்கலைக்கழகம் டிபார்ட் மென்ட் ஆப் பிஜி ஸ்ட டீஸ் அன்ட் ரிசர்ச் இன் அப்ளைட் எலக்ட்ரா னிக்ஸ் டாக்டர் ஆர்.எல்.ராய்பாகர், மகராஷ்ட்ரா ஜி.எச்.ராய் சோனி வியாபார மேலாண்மை நிறுவனம் டாக்டர் பிரீத்தி அகர்வால் ஆகியோரைக் கொண்ட மூவர் குழு அண்மையில் கல்லூரி வளாகத்துக்கு வருகை புரிந்தது.

நாக்பீர் குழு (NAAC Peer Team) வருகையின் போது, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் தர மதிப்பீட்டுக்கான தகுதி நிலைகள் கொண்ட, செய்திகளைக் காட்சி முறை வடிவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.முரளிதரன், விளக்கம் அளித்தார்.

இரத்தினம் கல்லூரியின் பாடத்திட்ட மாதிரி, கல்வியின் புதுமையான சிறப்பம்சங்கள், அதன் தொடர்ச்சியான தொழில் அறிவுத்திறன்கள், மாணவர்களின் அறிவு முன்னேற்றுத்துக்கு கல்வி சார்ந்த மன்றங்கள், படித்த மாணவர்களின் சிறப்புகள், மாணவர்களின் வேலைவாய்ப்பு, ஆராய்ச்சித்துறையில் மாணவர்களின் பங்கு, கல்லூரியின் மதிப்பீட்டு முறைகள் ஆகியவை, மற்றும் மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்களுடன் கலந்து ரையாடல் நடைபெற்றன.

கல்லூரியின் பல துறை சார்ந்த துறைத் தலைவர்கள், துறை சார்ந்த வளர்ச்சி முன்னேற்றங்களை எடுத்துரைத்தனர்.

இரண்டாம் நாள், பீர் குழுவின் தலைவர் தங்களது அனுபவங்களையும், கல்லூரியைப் பற்றிய கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

கல்லூரி ஐக்யூஏசி ஒருங்கிணைப்பாளர் முனைவர் டாக்டர் எஸ்.என்.சுரேஷ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img