fbpx
Homeபிற செய்திகள்ரியல்மி 9 தொடரில் 2 புதிய வகைகள் அறிமுகம்

ரியல்மி 9 தொடரில் 2 புதிய வகைகள் அறிமுகம்

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி மற்றும் 5G செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்திய இந்தியாவின் முதல் பிராண்டான ரியல்மி, டெக்லைஃப் பட்ஸ் N 100 மற்றும் ரியல்மி டெக்லைஃப் வாட்ச் S100 உடன் ரியல்மி 9 5G சீரிஸில் புதிய வரவுகளை அறிமுகப்படுத்தியது.


ரியல்மி 9 5G மற்றும் ரியல்மி 9 5G ஸ்பீடு எடிஷன் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை கொண்ட் ரியல்மி 9 5நி சீரிஸ், இந்த பிரிவில் முன்னணி 5G
புராசஸர்களுடன் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும். ரியல்மி டெக்லைஃப் எக்கோசிஸ்டமில் புதிய வகைகள் சமீபத்திய தொழில்நுட்பப் போக்குகளுடன் இணைந்து மனதுக்கு பிடித்த டிரெண்டிங் வாழ்க்கை முறையை வழங்கும் ரியல்மியின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும். இதன் அறிமுக விழாவில், ரியல்மி இந்தியாவின், தலைமை நிர்வாக அதிகாரியும், ரியல்மியின் துணைத் தலைவரும் மற்றும் ரியல்மி இன்டர்நேஷனல் பிசினஸ் குரூப்பின் தலைவருமான மாதவ் சேத் கூறியதாவது:
ரியல்மியைப் பொறுத்தவரை, இந்தியா ஒரு முதன்மையான சந்தையாகும். அதிநவீன மற்றும் தொழில்துறையிலேயே முதல் புராடக்ட்டுகளை கொண்டு வரும் ரியல்மியின் உறுதிப்பாடு ரியல்மி 9 5G மற்றும் ரியல்மி 9 5G ஸ்பீட் எடிஷன் ஆகியவற்றை கொண்டுவந்ததன் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது.


தொழில்துறையில் 5G தலைவராக இருப்பதால், ரியல்மி எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த 5நி அனுபவத்தையும், அதன் பிரிவிலேயே சிறந்த ஸ்மார்ட்போன் அம்சங்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரியல்மி 9 5G , ரியல்மி 9 5G ஸ்பீட் எடிஷன் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம், சிறந்த புராசஸர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குகிறோம்.


இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, எங்கள் டெக்லைஃப் எக்கோசிஸ்டமை உருவாக்கி வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு டிரெண்ட் செட்டிங் புராடக்ட்டுகளை வழங்கவும், தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஈடுஇணையற்ற ஸ்மார்ட் வாழ்க்கையை அனுபவிக்கவும் எங்களது AIOT புராடக்ட்டுகள் ஆஃபரிங்கை ரியல்மி, டெக்லைஃப் பட்ஸ்N 100 மற்றும் ரியல்மி டெக்லைஃப் வாட்ச் N 100 மூலம் விரிவுபடுத்துகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img