fbpx
Homeபிற செய்திகள்வலுவான வணிகத் திறன் வளர்ச்சியில் தொடர்கிறது டாடாவின் ஏஐஏ லைப்

வலுவான வணிகத் திறன் வளர்ச்சியில் தொடர்கிறது டாடாவின் ஏஐஏ லைப்

டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், இந்தியாவில் மிக வேகமான வளர்ச்சியை எட்டி வரும் காப்பீட்டு நிறுவனம். 2021 &- 22 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 1193 கோடி ரூபாய் பிரீமியமாக வசூலித்து 44 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

2021 முன்றாவது காலாண்டில் 831 கோடி பிரீமியம் பெற்றிருந்தது. டிசம்பர் 2021 உடன் முடிவடைந்த ஒன்பது மாத கால அளவில் 2,110 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. டிசம்பர் 22 ஒன்பது மாத கால அளவில், 32 சதவீத வளர்ச்சியை எட்டி 2786 கோடியை தனிநபர் காப்பீட்டு பிரீமியமாக வசூலித்துள்ளது.

ஒட்டுமொத்த வணிக பிரீமியம், டிசம்பர் 2021 ல், ஒன்பது மாத கால அளவில் 2766 கோடியிலிருந்து டிசம்பர் 2022ல் 3652 கோடியாக 32 சதவீதம் வளர்ச்சி பெற்றது. இதே கால அளவில் ஒட்டுமொத்த பிரீமியம் வருவாய், 7,035 கோடியிலிருந்து 27 சதவீதம் வளர்ச்சி பெற்று 8097 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நிதியாண்டு 2022 ன் 3வது காலாண் டில், டாடா ஏஐஏ லைப், சில்லறை வணிக பாதுகாப்பில் 89 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மதிப்பு 102,520 கோடி ரூபாய். கடந்த நிதியாண்டின் இதே கால அளவை காட்டிலும் இது 148 சதவீதம் வளர்ச்சியாகும்.

சந்தை பங்கானது, 13.1 சதவீதம் லிருந்து 25.4 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் டாடா ஏஐஏ முன்னிலை பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த சொத்து மேலாண்மை, 31 டிசம்பர் 2020 ல் 43,033 கோடியிலிருந்து 31 டிசம்பர் 2021 ல் 55,492 கோடி ரூபாயாக 29 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டாடா ஏஐஏ வின் அடிப்படை தத்துவத்தின் முடிவுகள் இவை.

பாலிசிதாரர்களுக்கு நீண்ட கால அடிப்படையிலான நிலையான வருவாயாக இது அமைந்துள்ளது. முன்னணி நிதி தரவு முகவரான மார்னிங்ஸ்டார், டாடா லைப் சொத்து மேலாண்மையில் உள்ள நிதிக்கு 4 ஸ்டார் அல்லது 5 ஸ்டார் தரவரிசையை அளித்துள்ளது.

ஐந்தாண்டுகளின் அடிப்படையிலான மார்னிங்ஸ்டார் நட்சத்திர தரவரிசையில், முந்தைய கால கட்டத்தில் 82 சதவீதத்தி லிருந்து 99.93 சதவீதம் தர வரிசைக்கு உயர்ந்து, 5 நட்சத்திர தர அளவை எட்டியுள்ளது.

டாடா ஏஐஏ லைப் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் நவீன் தகில்யானி, “21 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட டாடா ஏஐஏ லைப், ஒரு நம்பகமான காப்பீட்டு தீர்வை அளிக்கும் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

எளிமையான, வெளிப்படையான, வாடிக்கையாளர்களின் திருப்திகரமான சேவையை அளித்து வருகிறது. மிக வலிமையான கிளைம்களை அளித்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு சிறப்பான உதவியை வழங்கி வருகிறது.

மிகவும் மோசமான நிலையிலும் அதிக மதிப் புகளை வாடிக்கையாளர்களுக்கும், பங்கு தாரர்களுக்கும் வழங்கியுள்ளது,” என்றார்.

டாடா ஏஐஏ லைப், சமீபத்தில் 18 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட கிளைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img