fbpx
Homeபிற செய்திகள்விவசாயிகளுக்கு கிசான் கோஸ்தி நிகழ்ச்சி

விவசாயிகளுக்கு கிசான் கோஸ்தி நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம், உதகை வட் டாரம் தோட் டக்கலைத்துறை மற் றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இயங்கிவரும் விரிவாக்க சீர மைப்புத்திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2021-22 திட்டத்தின்கீழ் கிண் ணக்கொரை கிராம விவசாயிகளுக்கு கிசான் கோஸ்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் கி.அனிதா தலைமை வகித்து பேசுகையில், தோட் டக்கலைத் துறையில் இயங்கிவரும் அனைத்து திட்டங்கள் குறித்து கூறினார்.

வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் அச்சிடப்பட்ட இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு விநி யோகம் செய்யப்பட்டன.

உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் டாக்டர் ராஜா, தி கார்டன் ஆப் ஹோப் டிரஸ்ட் மேலாளர் சிவக்குமார், வேளாண்மை அலுவலர் மண் ஆய்வுக் கூடம் நிர்மலா மேரி, தோட்டக்கலை அலுவலர் தொல்காப்பியன் ஆகி யோர் தேயிலை சாகுபடி, மண்வள மேம்பாடு, இயற்கை உரங்கள் தயாரிப்பு மற்றும் கூட்டுப்பண்ணைய திட்டங்கள் குறித்து விளக்கினர்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரா.சதீஷ் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் அஸ்வினி நன்றி கூறினார்.

உதவி தொழில்நுட்ப மேலாளர் ரித்திஷ் குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img