fbpx
Homeபிற செய்திகள்வீட்டு வாசலில் எரிபொருள் விநியோகம் மஹிந்திரா- ரெபோஸ் எனர்ஜி கைகோர்ப்பு

வீட்டு வாசலில் எரிபொருள் விநியோகம் மஹிந்திரா- ரெபோஸ் எனர்ஜி கைகோர்ப்பு

மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திரா வின் டிரக் மற்றும் பஸ் பிரிவு, ரெடிமேட் ஃப்யூயல் பவுசர் டிரக்குகள் மூலம் வீட்டு வாசலில் எரிபொருள் விநியோக தேவை யை பூர்த்தி செய்ய ரெபோஸ் எனர்ஜியுடன் இணைந்துள்ளது.

வீட்டு வாசலில் எரிபொருள் விநியோக மாதிரியானது நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து, கோவிட்-க்கு பிந்தைய காலத்தில் இன்னும் வேகமாக உயர்ந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் ரெபோஸ் எனர்ஜியி-ன் இணை நிறுவனர் சேத்தன் வாலுஞ்ச் பேசியதாவது:

உலகம் முழுவதும் இடம் பெயர்ந்து செல்லுதல் மூலம் பொருட்களை எளிதாக அணுகும் நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் வீட்டு வாசலில் டீசல் டெலிவரி செய்வது நாட்டில் எரிபொருள் விநியோகத்தை எளிதாக்கியுள்ளது.

மொபைல் பெட்ரோல் பம்புகள் மூலம் சக்கரங்களில் டீசலைக் கொண்டு வருவது எங்கள் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும்.

மஹிந்திரா ஃபியூரியோ எரிபொருள் பவுசர் பயன்பாட்டிற்கு வழங்கும் தயாரிப்பு மேன்மைகள் மற்றும் பொருத்தப்பாட்டுடன், இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் அடைந்து அனைத்து வகையான ஆற்றல் விநியோகத்திலும் எதிர்காலத்தில் புரட்சியை ஏற்படுத்த விரும்புகிறோம்.

எங்களின் எரிபொருள் பவுசர் யூனிட்டில் டபுள் டிஸ்பென்சிங் யூனிட்கள், பவர் டேக்-ஆஃப் யூனிட், ஸ்மார்ட் ஃப்யூவல் லெவல் சென்சார்கள், பிரேக் இன்டர்லாக் மெக்கானிசம், ரிமோட் த்ரோட்டில், புத்திசாலித்தனமான ஜியோ-ஃபென்சிங் மற்றும் பயன்படுத்த எளிதான ரெபோஸ் செயலி போன்ற அம்சங்கள் உள்ளன என்றார்.

மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிமிடெட் வணிகத் தலைவர் – வர்த்தக வாகனங்கள் ஜலஜ் குப்தா பேசுகையில், டீசலின் பெரும்பகுதி சுரங்கம், உள்கட்டமைப்பு, உற்பத்தி, ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் போன்ற மொத்தமாக தேவைப்படும் தொழில்களுக்கு எரிபொருளாகச் செல்கிறது.

மஹிந்திராவின் இலகுவான மற்றும் இடைநிலை வணிக வாகன வரம்பு, எரிபொருள் பவுசர் இயக்கத்திற்கு சரியான பொருத்தமாக மாற்றவும் மற்றும் லாபத்தை உறுதிப்படுத்தவும் அவற்றின் உள்ளார்ந்த நன்மைகளுடன் வருகின்றன என்றார்.

படிக்க வேண்டும்

spot_img