fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை தொண்டாமுத்தூரில் உள்ள ரங்கசாமி பூவாத்தாள் மஹாலில் என்எஸ்எஸ் முகாம் நடைபெற்றது. அப்போது கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.

நிகழ்ச்சியில் பேராசிரியர் டாக்டர் சுமதி தலைமை வகித்தார், இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் என்.ஐ.ஜலாலுதீன், மனித விலங்கு மோதல்கள் மற்றும் காட்டு விலங்குகளிடம் அத்துமீறல் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் பற்றிய தனது அனுபவங்களை எடுத்துரைத்தார்.

வனவிலங்கு புகைப்படக்கலைஞர் நித்தியன் மணிஅரசு, வனவிலங்குகளைப் புகைப்படம் எடுத்தல் மற்றும் பாதுகாப்பு பற்றிய பவர் பாயிண்ட் விளக்கக்காட்சியை வழங்கினார். தனது உரையின் போது, புகைப்படம் எடுத்தல் மற்றும் பாதுகாப்பு புகைப்படம் எடுத்தல் வளர்ச்சிகள் குறித்து வலியுறுத்தினார்.

இயற்கை பாதுகாப்பு சங்க ஐ.ஜே.அனாஷ் அகமது இயற்கை பாதுகாப்பது எப்படி என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் சுமார் 100 மாணவிகள் கலந்து கொண்டனர்.

மற்றும் ஒருங்கிணைப்பு பணியாளர்கள் டாக்டர் ஆர்.கே.சுமதி, டாக்டர் ஜே.சுபாஷினி, செல்வி பி.பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவிகள் செயலர் எஸ்.ஜெயாதேவி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img